Pages

Saturday, January 29, 2011

வரமான வாழ்க்கை





கண்கள் இமை பிரித்ததும்
காதல் இதழ் விரித்தது

காதல் இதழ் விரித்ததும்
காமம் மணம் தெளித்தது

காமம் மணம் தெளித்ததும்
காயம் கடை விரித்தது

காயம் கடை விரித்ததும்
காலம் தடம் பதித்தது

காலம் தடம் பதித்ததும்
வாழ்க்கை வரம் ஆனது..!
.
.

Friday, January 21, 2011

தொலைந்து போன இதயம்



பெயர்சொல்லி அழைத்தாய்
பெயர்ந்து விழுந்தது
என் இதயம்...!

கைபிடித்து இழுத்தாய்
கைதாகிப் போனது
என் இதயம்...!

இறுக்கி அணைத்தாய்
இயக்கத்தை நிறுத்தியது
என் இதயம்...!

நெற்றியில் முட்டினாய்
நொறுங்கி விழுந்தது
என் இதயம்...!

மூக்கில் உரசினாய்
மூர்ச்சை ஆனது
என் இதயம்...!

இதழ் ஒற்றினாய்
இச்சை கொண்டது
என் இதயம்...!

காமம் கொண்டாய்
கரைந்து போனது
என் இதயம்...!

காதல் சொன்னாய்
காணாமல் போனது
என் இதயம்...!
.
.

Wednesday, January 5, 2011

அத்தான்...






என்னவனே...!

என் உயிர் சென்ற
தடத்தையெல்லாம்
தேடிப்பார் உன் நெஞ்சுக்குள்..
நம் காதலை
ஆராதித்து அர்ப்பணம்
செய்த மலர்த்தூவல்கள்
பரந்து கிடக்கும்.

அமைதியாய்
என்னை அனுபவிக்கும்
உன் மனதிற்குள்
ரகசியமாய் ஒரு பிரவேசம்
செய்கிறேன்..

என் கால் கொலுசோசை
கலைத்துவிட்ட காரணத்தினால்
கண்விழித்துக் கொள்கிறாய்
என்னைக்
கட்டி அணைக்கிறாய்..
முத்தம் பதிக்கிறாய்..
முழுதாய்ப் பறிக்கிறாய்..

உன் அணைப்பின்
சுகத்தில் சுகித்துக் கிடப்பவளை
சுமையெனக் கொள்வாயோ
எனை உயிருடன் கொல்வாயோ?
சொல்...
என்ன செய்யப் போகிறாய்....?
.
.