உன் கண்கள் கண்டு
நனையும்
என் கண்களையும்
உன் கைகள் கோர்த்து
களிக்கும்
என் கைகளையும்
உன் நெஞ்சம் சாய்ந்து
உரசும்
என் நெஞ்சத்தையும்
உன் இதழ்கள் கவ்விச்
சுவைக்கும்
என் இதழ்களையும்
உன் உயிரில் கலந்து
உறையும்
என் உயிரையும்
ஒட்டுமொத்தமாக
அடம்பிடிக்கும்
இன்னும்
ஒவ்வொன்றையும்
சொல்.....
என்ன செய்யப் போகிறாய்...!
.
.
0 comments:
Post a Comment